காவடிச்சிந்து - முத்துக்குமாரனடி
காவடிச் சிந்து
முத்துக்குமாரனடி முத்தமிழ்ச்செல்வனடி
சக்திக்குப் பிள்ளையடி அவனுக்கு இணை
ஜெகமெங்கும் இல்லையடி
முக்தி தரும் பரமன் முகத்தினில் ஒளிர்கின்ற
நெற்றிக்கண் வழி வந்தவன் - அசுரர் தம்மை
நெடிய போர் தன்னில் வென்றவன்
வித்தைக்கு ராணி என்னும் வாணிதொழும் நான்முகனை
பூட்டிச் சிறையிட்டவன் அவன் கருவம்
உடைந்தொட வழி விட்டவன்
தந்தைக்கு குருவாகி திருவேரகம் தண்ணில்
மந்திரப் பொருள் சொன்னவன் மலைநாடெங்கும்
மயிலேறி வரும் மன்னவன்
அகத்தியன் நக்கீரன் ஆதிசங்கரரோடு
அருணகிரிகருள் செய்தவன் - சம்பந்தன் என
அவனியில் புகழ் கொண்டவன்
சித்தர்க்கு சித்தரென தென்பழனி மாமலையில்
நித்தமும் அருள் செய்பவன் பக்தர்களின்
நெஞ்சினில் குடி கொண்டவன்
வள்ளி தெய்வ யானையோடு வடிவேலும் கையில் கொண்டு
வள்ளலவன் ஆடி வருவான் - தமிழ் முழங்கும்
வாசலை நாடி வருவான்
சரவணபவ வென்று என்று சொன்னவர் துயர்தீர
சுருதியில் ஓடி வருவான் திருச்செந்தூரில்
சஷ்டியில் நின்றருள்வான்
முத்துக்குமாரனடி.....
பாடல் வரி - ர.பழனிசாமி
இசை - சூலமங்கலம் ராஜேஸ்வரி
ஆல்பம் - கந்தன் புகழ்மாலை
கருத்துகள்
கருத்துரையிடுக